/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை ஓபன் செஸ் தமிழக வீரர் முன்னிலை
/
சென்னை ஓபன் செஸ் தமிழக வீரர் முன்னிலை
ADDED : ஜன 07, 2026 06:17 AM
சென்னை: தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், சென்னை ஓபன் சர் வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி, எழும்பூரில் நடக்கிறது. போட்டியில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா உட்பட 22 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள் ளனர்.
நேற்று நடந்த ஏழாவது சுற்றில், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமான ரோஹித் கிருஷ்ணா, பெலாரஸ் வீரர் அலெக்ஸி பெட்ரோவை வீழ்த்தி 6.5 பு ள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றினார். தோல்வியடைந்த அலெக்ஸி பெட்ரோவ் 5.5 புள்ளிகளில் உள்ளார்.
மற்றொரு முக்கிய ஆட்டத்தில், பெலாரஸ் வீரர் அலெக்ஸேஜ் அலெக்ஸாண்ட்ரோவ் மற்றும் தமிழக வீரர் ஸ்ரீஹரி இ டையேயான மோதல் டிராவில் முடிந்தது.

