/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சமஸ்கிருத கல்லுாரியில் கோடை கால பயிற்சி முகாம்
/
சமஸ்கிருத கல்லுாரியில் கோடை கால பயிற்சி முகாம்
ADDED : மே 21, 2025 12:49 AM
சென்னை :மயிலாப்பூரில் அமைந்துள்ள சமஸ்கிருத கல்லுாரியில், ஆன்மிகம் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கோடை காலத்தை முன்னிட்டு, யசூர்வேத சந்தியா வந்தன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இன்று முதல், வரும் 30ம் தேதி வரை, மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில், சந்தியா வந்தன மந்திரங்களின் அர்த்தங்கள், செய்முறை, அதன் அறிவியல் உண்மை ஆகியவை குறித்து, டாக்டர் சவுஜன்யகுமார் விளக்குகிறார்.
சிறார் முதல் இளைஞர்கள் வரை, இம்முகாமில் பங்கேற்கலாம். முதலில் வரும், 25 நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு, ஹரிஹரன்- - 98406 23994 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.