ADDED : ஆக 22, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்: தாம்பரம் சானடோரியத்தில், 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையை, இம்மாதம் 9ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, அக்கட்டடத்தில், நோயாளிகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நோயாளிகளின் வசதிக்காக, 'ஜோகோ'என்ற தனியார் நிறுவனம், 10 கணிணி, 5 பிரின்டர்களை நேற்று, இலவசமாக வழங்கியது.
தேசிய நலவாழ்வு மையத்தின் இயக்குனர் அருண் தம்புராஜிடம், கணிணி, பிரின்டர்களை, அந்நிறுவனத்தின் அதிகாரிகள் வழங்கினர்.