/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாயமான முதியவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
/
மாயமான முதியவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
ADDED : ஜன 19, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைசென்னை, விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே, முதியவர் ஒருவர் விபத்தில் காயமடைந்து, உதவி இன்றி தவித்து வந்தார்.
இதை அறிந்த காவல் கரங்கள் குழுவினர், அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விசாரித்த போது, அவர் மேடவாக்கத்தைச் சேர்ந்த சண்முகம், 75, என்பதும், அவர் காணாமல் போனதாக, அவரது மனைவி காமாட்சி, மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சிகிச்சைக்கு பின், அவரது குடும்பத்தினருடன் காவல் கரங்கள் குழுவினர் முதியவரை ஒப்படைத்தனர்.

