ADDED : பிப் 09, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல், மதுரவாயலில் 800 ஆண்டுகள் பழமையான, மார்க்க சகாய ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 73.76 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு, நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், 39.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கோவில் அலுவலகம், மடப்பள்ளி, தரை தளம் ஆகியவற்றை ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று திறந்து வைத்தார். அப்போது, 'மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் கோவிலில், 1.35 கோடி ரூபாய் மதிப்பில் ராஜகோபுரம் கட்டப்படும்' என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன், ஹிந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் ரேணுகா தேவி, கோவில் செயல் அலுவலர் அன்புக்கரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

