/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கம்
/
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 10, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் கணக்கொடுப்பு பணிகள், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் துவங்கியுள்ளன.
அந்த வகையில், வடசென்னை அலுவலகம் சார்பில், அமர் சேவா தொண்டு நிறுவன களப்பணியாளர்களால், தண்டையார்பேட்டை, திரு.வி.க., நகர் மற்றும் ராயபுரம் ஆகிய மூன்று மண்டலங்களில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.
எனவே, அந்தந்த மண்டலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விபரங்களுக்கு, வடசென்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.