/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சூரிய மகள்' விருது வழங்கும் விழா
/
'சூரிய மகள்' விருது வழங்கும் விழா
ADDED : ஏப் 02, 2025 12:24 AM

'சூரிய மகள்' விருது வழங்கும் விழா
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சாதனை பெண்களுக்கு 'சூரிய மகள்' விருது வழங்கும் விழா, தி.மு.க., சார்பில் நேற்று நடந்தது. விருதுகளை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வழங்கினார். விருதாளர்கள் இடமிருந்து வலம்: டி.ஏ.எப்.இ., நிறுவன தலைவர் மல்லிகா சீனிவாசன், டாக்டர் சவுமியா சுவாமிநாதன், நீதிபதி டி.என்.மாலா, டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, எழுத்தாளர் இந்துமதி, சினிமா பின்னணி பாடகி பி.சுசிலா, எழுத்தாளர் சிவசங்கரி, முனைவர் சாரதா நம்பி ஆரூரன், தமிழ் சைவ பேரவை தலைவர் கலையரசி நடராஜன், தொழில் முனைவோர் நந்தினி மற்றும் எஸ்.ஐ.இ.டி., அறக்கட்டளை வழக்கறிஞர் பதர் சயித். பின் வரிசையில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா. இடம்: பிராட்வே.

