sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சூர்யா மியூசிக் பள்ளி 4ம் ஆண்டு விழா

/

சூர்யா மியூசிக் பள்ளி 4ம் ஆண்டு விழா

சூர்யா மியூசிக் பள்ளி 4ம் ஆண்டு விழா

சூர்யா மியூசிக் பள்ளி 4ம் ஆண்டு விழா


ADDED : ஆக 03, 2025 12:25 AM

Google News

ADDED : ஆக 03, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.நகர் சூர்யா மியூசிக் பள்ளியின் 4ம் ஆண்டு விழா, நேற்று தி.நகரில் நடந்தது.

அறிவுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக, சூர்யா மியூசிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் 4ம் ஆண்டு விழா மற்றும் அங்கு பயிலும் குழந்தைகளின் 200வது மேடை விழா, தி.நகரில் உள்ள சர் பி.டி., தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது.

இதில், முன்னாள் நீதிபதி குரு ராஜன் பங்கேற்று, விருதுகள் வழங்கினார். பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ, முகப்பேர் 'இஸ்கான்' கோவில் துணைத் தலைவர் முகுந்த மாதவ தாஸ் சுவாமிஜி, சூர்யா இசைப்பள்ளி நிறுவனர் பிரபா குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில், யுடியூபர் சுந்தர் என்பவருக்கு ராக கான ரத்னா; ஐ.ஓ.பி., வங்கி ஓய்வு பெற்ற மேலாளர் ஸ்ரீதரன் என்பவருக்கு ரசிக கால ரத்னா; சமூக ஆர்வலர்கள் ஆலந்துார் குமார் மற்றும் மடிப்பாக்கம் சேகர் ஆகியோருக்கு சேவா கலா ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், ஸ்ரீ சாம்பசிவ மணி குருக்களுக்கு ஆன்மிக செம்மல் விருது மற்றும் சாய் கணேஷ் பவுண்டேஷன் நிறுவனர் அலமேலு சிவராமன், ஸ்வாபிமான் அறக்கட்டளை இயக்குநர் பார்த்திபன், சமூக ஆர்வலர் ராணி கிருஷ்ணன், ரமண சன்ரித்ய ஆலய நிறுவனர் மற்றும் இயக்குநர் அம்பிகா காமேஷ்வர், பிரக்ரமிகா தொழிற்கல்வி நிறுவன நிறுவனர் மற்றும் இயக்குநர் காயத்ரி நரசிம்மன், ஜெய்ஹிந்த் பாரத் அகாடமி சாமி சந்திரசேகர், ஜெய் ஹிடன் டிரஸர் சிறப்பு கல்வியாளர் - நிறுவனர் ஜெயஸ்ரீ கடம்பி, ஷ்யாமலா ஏ.சி.யூ கிளினிக் டாக்டர். ஷ்யாமலா, உதவிக்கரம் அமைப்பு மாநில பொது செயலர் கோபிநாத் உள்ளிட்டோருக்கு, 'சேவை செம்மல்' விருது வழங்கப்பட்டது.

மயிலை பூம்பாவை சபா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஒய்.ஆர்.ஜி.ராஜி, மெரிடியன்மேக் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ் ரோவே, ஏ.எல்.4.எஸ்., அறக்கட்டளை நிறுவனர் சூரிய நாராயணன் மற்றும் லலிதா, சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் சாய் சங்கரா பஞ்சாபகேசன் ஆகியோருக்கு மனிதநேய மாமணி விருது வழங்கப்பட்டது.

வலிமையின் அடித்தளம்

நிகழ்வில் நீதிபதி குருராஜன் பேசியதாவது:

அரசால் மட்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை நிறைவு செய்ய முடியாது. அதற்கு, பிரபா குருமூர்த்தி போன்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு, முக்கிய பங்கு உள்ளது.

இங்குள்ள பெற்றோரின் பயணம் எளிதானதல்ல. ஆனால் உங்கள் அன்பு, பொறுமை மற்றும் அசைக்க முடியாத ஆதரவு, உங்கள் குழந்தைக்கு வலிமையின் அடித்தளமாக உள்ளது.

செய்தித்தாள்களை திறந்தாலே, கொலை, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறித்த செய்திகள் மட்டுமே உள்ளன. நல்ல விஷயங்கள் மற்றும் சமூகத்துக்கு தொண்டாற்றும் நபர்கள் குறித்த செய்திகள் வெளி வந்தால், இளைஞர்களுக்கு அது எடுத்துக்காட்டாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us