ADDED : ஜூலை 03, 2026 01:22 AM

அ நிறம் | அளவு
சென்னை: திருவான்மியூர் கடற்கரையில் ஒதுங்கிய சிலைகள் குறித்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
சென்னை திருவான்மியூர், அஷ்டலட்சுமி கோவில் அருகில், நேற்று மாலை கடற்கரையில் நான்கு சிலைகள் கரை ஒதுங்கின. பகுதிமக்கள் அளித்த தகவலின்படி திருவான்மியூர் போலீசார் சிலைகளை பாதுகாத்தனர்.
விஷ்ணு, நாகர், கருப்பசாமி, கால பைரவர் சிலைகள் எனவும், 20 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனவும் தெரிந்தது.
பின், வேளச்சேரி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்ததன்படி, வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று, நான்கு சிலைகளையும் மீட்டு சென்றனர்.
