/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவிரி ஆற்றில் அமர்ந்து பாராயணம் செய்த சுவாமிகள்
/
காவிரி ஆற்றில் அமர்ந்து பாராயணம் செய்த சுவாமிகள்
ADDED : ஜன 23, 2024 12:41 AM

சென்னை, அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, அம்பத்துார் புவனேஸ்வரி பீடத்தைச் சேர்ந்த பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள், நேற்று, திருச்சி, அம்மா மண்டபம் காவிரி ஆற்றில், கிழக்கு நோக்கி அமர்ந்தபடி, ராமநாமத்தை பாராயணம் செய்தார்.
அவர், கூறியதாவது:
நாடு முழுதும், ராம நாமம் ஜெபிக்க கேட்டது மிக ஆனந்தமாக உள்ளது. இனிமேல், பாரத தேசத்திற்கு எந்த ஒரு இன்னலும் கெடுதலும், துன்பமும் துயரமும் இல்லை. மாறாக ஐஸ்வர்யமும், ஆனந்தமும் பொங்கப் போகிறது; நிம்மதி திளைக்க போகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் வந்து விட்டது என்றால், பூலோகத்தில் வைகுண்டம் இறங்கி வந்து விட்டது என்று தான் அர்த்தம். நாட்டில் அனைத்தும் செழித்து ஓங்க வேண்டும் என்பதால், காவிரி ஆற்றில் அமர்ந்து ராம நாமம் கூறி தியானித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

