/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராக ஆலாபனையில் ஸ்வராத்மிகா அசரடிப்பு
/
ராக ஆலாபனையில் ஸ்வராத்மிகா அசரடிப்பு
ADDED : ஜன 05, 2025 12:21 AM

மயிலை, தேசிக வித்யா பவனில், மோஹன வர்ணத்தில், தன் கச்சேரியை ஆரம்பித்தனர் ஸ்வராத்மிகா ஸ்ரீகாந்த் மற்றும் அவரது குழு.
சாமரம் ராகத்தில், முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய 'சித்தி வினாயகம்' என்ற கிருதியை பாட ஆரம்பித்தார். ரூபக தாளத்தில் இயற்றப்பட்ட இக்கிருதிக்கு, கற்பனை ஸ்வரங்கள் மற்றும் ஸ்வர கோர்வைகளை சேர்த்து அழகூட்டினர்.
கர்நாடக இசையில் பிரபலமான ராகமாக திகழும் கீரவாணியை, ஸ்ரீ லட்சுமி பட், தன் வயலின் இசையை சபையில் நிரப்பினார்.
அவரை தொடர்ந்து ஸ்வராத்மிகா, ராக ஆலாபனையாக வழங்க ஆரம்பித்து, கச்சிதமாக தானம் பாடி வீணைக்கு வழிவகுத்தார். சாருலதா வீணையில், கீரவாணி ராகத்தை சிறப்பாக இசைத்தார்.
மிஸ்ர சாபு தாளத்தில், 'வானனைம்மதி சூடிய மைந்தனை' என, அப்பர் இயற்றிய தேவாரத்தை தேர்ந்தெடுத்து பாடினார்.
இதில் ராகமாலிகா ஸ்வரங்களில், காபி, ஹிந்தோளம் மற்றும் தர்மாவதி ராகங்களை உள்ளடக்கியிருந்தார். மயிலை கற்பகாம்பாள் தாயை போற்றி, சிந்துபைரவி ராகத்தில் 'கருணை தெய்வமே' என்ற கிருதியை பாடி கச்சேரியை நிறைவு செய்தார்.
-ரா.பிரியங்கா

