/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீச்சல் டைவிங்: தமிழக அணி 2ம் இடம்
/
நீச்சல் டைவிங்: தமிழக அணி 2ம் இடம்
ADDED : ஜன 07, 2025 12:18 AM

சென்னை,
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில், 35வது தென் மண்டல நீச்சல் டைவிங் போட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், தமிழக அணியிலிருந்து, குரூப் - 3 சிறுமியர் பிரிவில், சிவாஷ்மி 1 மீ., மற்றும் 3 மீ., 'ஸ்பிரிங் போர்டு' மற்றும் 'ஹைபோர்டு' ஆகிய மூன்று பிரிவிலும், 3 தங்கம் வென்றார்.
குரூப் - 1 சிறுமியர் பிரிவில், மிருணாளினி 1 மீ., 'ஸ்பிரிங் போர்டு' மற்றும் 'ஹைடைவிங்' ஆகிய இரு பிரிவுகளில், தலா ஒரு தங்கம் வென்றார்.
குரூப் - 3 சிறுவர் பிரிவில், லோகிதாஷ்வா 'ஹைபோர்டு' பிரிவில் தங்கமும், 1 மீ., மற்றும் 3 மீ., 'ஸ்பிரிங் போர்டு' ஆகிய போட்டிகளில், இரண்டு வெள்ளி பதக்கமும் கைப்பற்றினார். குரூப் - 1 சிறுவர் பிரிவில், சீமான் 'ஹைபோர்டு' பிரிவில் தங்கமும், 3 மீ., ஸ்பிரிங் போர்டு பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றார்.
குரூப் - 2 சிறுமியர் பிரிவில், ஆராதனா 1 மீ., மற்றும் 3 மீ., ஸ்பிரிங் போர்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றார்.
தனிஷ்ஸ்ரீ, கிருஷிதா ஆகிய இருவரும், தலா 2 வெண்கலம் வென்றனர். முடிவில், தமிழக அணி, ஏழு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் நான்கு வெண்கல பதக்கம் என, மொத்தம் 154 புள்ளிகள் பெற்று, இரண்டாவது இடத்தை பிடித்து, ரன்னர் அப் பட்டத்தை வென்றது.
பத்து தங்கம், ஆறு வெள்ளி, நான்கு வெண்கலம் வென்று, 266 புள்ளி பெற்ற கர்நாடகா அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.