ADDED : ஜன 16, 2025 12:41 AM
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் இரவு, அபுதாபி செல்லும் 'எத்தியாடு ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் ஏற முயன்ற, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்டீன் ரங்கேல்,70 என்பவரின் உடமைகளை, விமான நிலைய பதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ஜி.பி.எஸ்., கருவி இருந்தது தெரியவந்தது.
இந்திய விமான பாதுகாப்பு சட்டத்தின் விதிகளின்படி, இக்கருவியை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. விசாரணையில், 'எங்கள் நாட்டில் இக்கருவியை எடுத்துச்செல்ல தடையில்லை. சில தினங்களுக்கு முன், சுற்றுலா விசாவில் டில்லி வந்து, அங்கிருந்து சென்னைக்கு வந்தேன். மற்ற விமான நிலையங்களில், இக்கருவியை எடுத்துச்செல்ல யாரும் அனுமதி மறுக்கவில்லை' என்றார்.
அவர் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லை. இதனால், மார்ட்டீன் ரங்கேல் விமான பயணம் ரத்து செய்யப்பட்டது.

