/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' டி - 20 ' கிரிக்கெட் கோலபெருமாள் பள்ளி வெற்றி
/
' டி - 20 ' கிரிக்கெட் கோலபெருமாள் பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 12, 2025 12:15 AM
சென்னை, 'டி - 20' கிரிக்கெட் போட்டியில், கோலபெருமாள் பள்ளி அணி, 174 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, சேத்துப்பட்டில் நடக்கிறது.
நேற்று நடந்த போட்டியில், கோலபெருமாள் அணி முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு, 227 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய எம்.டி.எம்., அணி, 10.4 ஓவர்களில் 53 ரன்களில் ஆட்டமிழந்து, 174 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மற்றொரு போட்டியில், பவன்ஸ் ராஜாஜி பள்ளி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு, 202 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய, எம்.சி.சி., அணி 132 ரன்கள் அடித்து, 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.