/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
௶'டி - 20' கோப்பை கிரிக்கெட் பிங்க் வாரியர்ஸ் 'சாம்பியன்'
/
௶'டி - 20' கோப்பை கிரிக்கெட் பிங்க் வாரியர்ஸ் 'சாம்பியன்'
௶'டி - 20' கோப்பை கிரிக்கெட் பிங்க் வாரியர்ஸ் 'சாம்பியன்'
௶'டி - 20' கோப்பை கிரிக்கெட் பிங்க் வாரியர்ஸ் 'சாம்பியன்'
ADDED : ஆக 10, 2025 12:13 AM
சென்னை சென்னையில் நடந்த 'பிரேயர் டி - 20' மகளிர் கிரிக்கெட் கோப்பைக்கான போட்டியில், பிங்க் வாரியர்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 'பிரேயர் கோப்பைக்கான மகளிர் டி - 20' லீக் கிரிக்கெட் தொடர் போட்டிகள், சென்னையின் ப ல மைதானங்களில் நடந்தன .
இதன் இறுதி போட்டி, வண்டலுார் அடுத்த புதுப்பாக்கம் வி.பி.நெஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடத்தது. இதில் பிங்க் வாரியர்ஸ் அணி, ஆரஞ்சு டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது.
'டாஸ்' வென்ற பிங்க் வாரியர்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆரஞ்சு டிராகன்ஸ் அணியின் வீராங்கனையர் கமலினி - 19, பார்முகி - 31, ஜான்வி குண்டு - 30, ஸ்ரீநிதி - 25 ரன்கள் அடித்து அணிக்கு உதவினர்.
முடிவில் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் குவித்து, முதல் ஆட்டத்தை நிறைவு செய்தது. பிங்க் வாரியர்ஸ் சார்பில் சாரதிப்ரியா, ஹாசினி தலா இரண்டு விக்கெட்டுகளை சரித்தனர்.
அடுத்து களமிறங்கிய பிங்க் வாரியர்ஸ் அணியின் அபர்ணா - 23, ஹாசினி - 28 ரன் எடுத்து, அணிக்காக அருமையான துவக்கத்தை தந்தனர். தொடர்ந்து நிதானமாக விளையாடிய ரோஷினி, 37 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பின் திரிஷா மற்றும் உதயாஸ்ரீ ஆகியோர் அவுட் ஆகாமல், முறையே 16, 15 ரன்கள் எடுத்தனர். 18.5 ஓவரில் 126 ரன்கள் அடித்து, அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தனர். இதனால் பிங்க் வாரியர்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது.