/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டேபிள் டென்னிஸ் போட்டி 200 மாணவர்கள் உற்சாகம்
/
டேபிள் டென்னிஸ் போட்டி 200 மாணவர்கள் உற்சாகம்
ADDED : நவ 05, 2024 12:29 AM

சென்னை, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில, வருவாய் மாவட்ட அளவிலான டேபிஸ் டென்னிஸ் போட்டி, தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி., பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது.
இதில், மாணவருக்கான போட்டியில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மூன்று பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடந்தன. ஏற்கனவே 23 குறுவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இதில், 19 வயதினருக்கான போட்டிகள் முடிவில் தனிநபரில் வாத்சல்யா மெட்ரிக் பள்ளியின் மாணவன் பிரஜித்குமார் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், ஆலந்துார் மாண்போர்ட் பள்ளியின் மாணவன் விவியன் ராஜ் மற்றும் பெரம்பூர் காலிங்கை ரங்கநாதன் மாண்போர்ட் பள்ளியின் மாணவன் உதயபிரகாஷ் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர்.
இரட்டையருக்கான ஆட்டத்தில், தண்டையார்பேட்டை பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், ஆலந்துார் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 2ம் இடத்தையும், அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி மாணவர்கள் 3ம் இடத்தையும் பிடித்து அசத்தினர்.
இன்று, மாணவியருக்கான போட்டிகள் நடக்கின்றன.