/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - கொல்லம் ரயில் வரும் 1 முதல் நேரம் மாற்றம்
/
தாம்பரம் - கொல்லம் ரயில் வரும் 1 முதல் நேரம் மாற்றம்
தாம்பரம் - கொல்லம் ரயில் வரும் 1 முதல் நேரம் மாற்றம்
தாம்பரம் - கொல்லம் ரயில் வரும் 1 முதல் நேரம் மாற்றம்
ADDED : ஆக 27, 2025 12:20 AM
சென்னை, கேரளா மாநிலம், கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில், வரும் 1ம் தேதி முதல் நேரம் மாற்றப்படுகிறது.
தாம்பரம் - கொல்லம் விரைவு ரயில், அதிகாலை 2:30 மணிக்கு தாம்பரம் வருவதால், இருப்பிடம் செல்ல சிரமம் ஏற்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த ரயிலில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, தாம்பரம் வந்தடையும் நேரத்தை மாற்றியமைத்து வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.
அதன்படி, கொல்லத்தில் இருந்து பகல் 12:00 மணிக்கு பதிலாக இனி மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:06க்கு குண்டரா, 4:15க்கு கொட்டாரக்கரா, 4:28 மணிக்கு ஆவநீஸ்வரம், 4:55க்கு புனலுார், 5:43க்கு தென்மலை, 6:13க்கு ஆரியங்காவு, இரவு 7:10 மணிக்கு செங்கோட்டை வந்தடையும். இரவு 7:28க்கு தென்காசி, 7:43க்கு கடையநல்லுார், 8:08க்கு சங்கரன்கோவில், 8:33க்கு ராஜபாளையம், 8:48க்கு ஸ்ரீ வில்லிப்புத்துார், 9:03க்கு சிவகாசி, 9:43க்கு விருதுநகர், 10:25க்கு மதுரை, 11:25க்கு திண்டுக்கல், மறுநாள் அதிகாலை 1:45க்கு திருச்சி, 3:33க்கு விருத்தாச்சலம், 3:49க்கு உளுந்துார்பேட்டை, 4:40க்கு விழுப்புரம், காலை 6:28க்கு செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு காலை 7:30 மணிக்கு வரும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.