/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை பணிகளை முடிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு
/
பாதாள சாக்கடை பணிகளை முடிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு
பாதாள சாக்கடை பணிகளை முடிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு
பாதாள சாக்கடை பணிகளை முடிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு
ADDED : நவ 12, 2025 12:33 AM
சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை உடனே முடிக்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷனருக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 டிசம்பரில், தாம்பரம் மாநகராட்சி, 13வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர், கன்டோன்மென்ட், பல்லாவரம் மலைமேடு பகுதியில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது.
இதை குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. மூன்று பேர் உயிரிழந்தனர்; 20 பேர் உடல் நல பாதிப்பால், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.
நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
பல்லாவரம் பகுதியில் மூன்று பேர் உயிரிழப்புக்கு குடிநீர் மாசு காரணம் அல்ல என்று உடற்கூராய்வு, நுண்ணுயிர் சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, தாம்பரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனாலும், குடிநீர் மாசுபடாமல் இருப்பதை மாநகராட்சியும், தமிழக குடிநீர் வடிகால் வாரியமும் உறுதி செய்ய வேண்டும்.
தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பு இல்லாதது கவலை அளிக்கும் விஷயம்.
மாரியம்மன் கோவில் தெரு, காமராஜ் நகர், பல்லாவரம் போன்ற அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை.
இப்பகுதிகளில் குறுகிய சாலைகள், பழைய குழாய்கள், அங்கீகரிக்கப்படாத கழிவுநீர் இணைப்புகள் உள்ளன.
சில பகுதிகளில், குடிநீர் குழாய்கள் திறந்த வடிகால்களுக்கு அருகிலோ அல்லது அதற்கு மேலோ செல்கின்றன. இதனால், மழை காலங்களில் குழாய்களில் சேதம் ஏற்பட்டு, குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது.
இதை தடுக்க, பம்மல், அனகாபுத்துாரில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளை, உடனே முடித்து, மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மீதமுள்ள 21 வார்டுகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர், கழிவுநீர் குழாய் இணைப்புகள் சரியாக உள்ளதா என்பதை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும்.
பாதாள சாக்கடை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு முன்னுரிமை அளித்து, அதற்குரிய நிதியை, சரியான நேரத்தில் தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

