/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., - கூட்டணி கட்சிகள் அடாவடி
/
தி.மு.க., - கூட்டணி கட்சிகள் அடாவடி
ADDED : நவ 12, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், தங்கசாலையில் உள்ள அரசு அச்சகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கட்சியினர், தங்கள் வாகனங்கள், அருகே உள்ள வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தில் அத்துமீறி நிறுத்தினர். இதனால், பேருந்து நிலையத்திற்குள் இட நெருக்கடி ஏற்பட்டு, பயணியர் பேருந்தில் ஏறவும், இறங்கி நடந்து செல்லவும் சிரமப்பட்டனர்.

