/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் மேம்பாட்டு பணிகள் மாநகராட்சி கமிஷனர் சோதனை
/
தாம்பரம் மேம்பாட்டு பணிகள் மாநகராட்சி கமிஷனர் சோதனை
தாம்பரம் மேம்பாட்டு பணிகள் மாநகராட்சி கமிஷனர் சோதனை
தாம்பரம் மேம்பாட்டு பணிகள் மாநகராட்சி கமிஷனர் சோதனை
ADDED : மார் 27, 2025 11:51 PM
தாம்பரம்,தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், 34வது வார்டு, சிட்லபாக்கத்தில், 51.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும், 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், நேற்று ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ராமகிருஷ்ணாபுரம், மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், 68 லட்சம் செலவில் கட்டப்படும் கூடுதல் கட்டடம்; மகாதேவன் தெருவில், 12 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை ஆகிய பணிகளையும் சோதனை செய்தார்.
திருமலை நகரில், 12 லட்சம் ரூபாய் செலவில் நடக்கும் மழைநீர் கால்வாய்; பவந்தியார் தெரு குளம் புனரமைப்பு ஆகிய பணிகளையும் ஆய்வு செய்தார்.
மணியம்மை தெரு மழைநீர் கால்வாய்; டெல்லஸ் அவென்யூ, செம்மொழி பூங்கா புனரமைப்பு; அன்னை அஞ்சுகம் பூங்கா புனரமைப்பு ஆகிய பணிகளையும் கமிஷனர் பார்வையிட்டார்.