/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் மாநகராட்சி 'யு - டியூப்' துவக்கம்
/
தாம்பரம் மாநகராட்சி 'யு - டியூப்' துவக்கம்
ADDED : ஏப் 05, 2025 12:18 AM
தாம்பரம் தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன. இவற்றில், மாநகராட்சி சம்மந்தமாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அதிகாரிகள் ஆய்வு, புதிய பணிகள் துவக்கம், மாநகராட்சி கூட்டம் உள்ளிட்டவற்றை மக்கள் அறிவதற்கு வசதியாக, 'யு - டியூப், வாட்ஸாப்' சேனல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
'தாம்பரம் கார்ப்பரேஷன்' என்ற தலைப்பில் இந்த சேனல்களை, பொதுமக்கள் காணலாம்.
முதற்கட்டமாக, 'வாட்ஸாப்' சேனல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. யு - டியூப் சேனலுக்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்த சேனல்களை பார்ப்பதோடு, பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம். இதேபோல், 'எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டா' போன்ற சமூக வலைதளங்களிலும், தாம்பரம் மாநகராட்சி தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.