/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இந்திய ஓபன் தடகள போட்டி யில் தமிழக வீரர், வீராங்கனைகள் அசத்தல்
/
இந்திய ஓபன் தடகள போட்டி யில் தமிழக வீரர், வீராங்கனைகள் அசத்தல்
இந்திய ஓபன் தடகள போட்டி யில் தமிழக வீரர், வீராங்கனைகள் அசத்தல்
இந்திய ஓபன் தடகள போட்டி யில் தமிழக வீரர், வீராங்கனைகள் அசத்தல்
ADDED : ஏப் 17, 2025 12:24 AM

சென்னை
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், தேசிய அளவிலான 'இந்திய ஓபன் தடகள' போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் காலை துவங்கி மாலை நிறைவடைந்தது.
தமிழகம், ஹரியானா, டில்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 460 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றனர்.
இதில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் கிட்சன் 10.73 வினாடியில் முதலிடத்தை பிடித்தார். அதேபோல் 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவில் தொண்டபதி மிருத்யம் முதல் இடத்தையும், தமிழக வீரர் வருண் ஒரியா மனோகர் இரண்டாம் இடத்தையும், மற்றொரு தமிழக வீரர் நித்தின் அருணன் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர்.
உயரம் தாண்டுதலில் ஆந்திராவின் ஷேக் மொய்தீன் முதலிடத்தையும், தமிழகத்தின் முகேஷ் அசோக்குமார் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
நீளம் தாண்டுதலில் உத்தர பிரதேசம் ஆதித்யா குமார், ரயில்வே ஸ்போர்ட்ஸ் சுவாமிநாதன், தமிழகத்தின் சாரோன் ஜஸ்டஸ் ஆகியோர், முறையே முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றினர்.
மும்மூறை தாண்டுதலில் கேரளாவின் கார்த்திக், தமிழகத்தின் கெய்லி வெனிஸ்டர் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர்.
ஆண்களுக்கான கோல் ஊன்றி தாண்டுதல் பிரிவில், தமிழகத்தின் கவுதம் மற்றும் யுகேந்திரன் முதல் இரண்டு இடத்தையும் கைப்பற்றினர்.
குண்டு எறிதல் பிரிவில் பஞ்சாப் வீரர் தாஜிநதர்பால், தமிழகத்தின் பாலாஜி ஆகியோர், முதல் இரண்டு இடங்களை வென்றனர்.
இப்போட்டியில் தேர்வாகியோர், இம்மாதம் 21 - 24 வரை நடக்கும், 28வது தேசிய சீனியர் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.