/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம் தொடர்ந்து அசத்தல்
/
தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம் தொடர்ந்து அசத்தல்
தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம் தொடர்ந்து அசத்தல்
தேசிய கூடைப்பந்து போட்டி தமிழகம் தொடர்ந்து அசத்தல்
ADDED : ஜன 18, 2025 12:36 AM

சென்னை, எஸ்.ஜி.எப்.ஐ., எனும் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 68வது தேசிய கூடைப்பந்து போட்டி, செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.
இதில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான போட்டியில், தமிழகம், பீஹார், டில்லி, புதுச்சேரி உட்பட நாடு முழுதும் இருந்து, 33 மாநில அணிகள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின. போட்டிகள், 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் நடக்கிறது.
நேற்று காலை நடந்த 'லீக்' ஆட்டத்தில், தமிழகம் மற்றும் மஹாராஷ்டிரா அணிகள் மோதின. இதில், 63 - 49 என்ற புள்ளிக்கணக்கில், தமிழக அணி வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் தமிழகம் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.