/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி ராணுவத்தை வீழ்த்தியது தமிழகம்
/
முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி ராணுவத்தை வீழ்த்தியது தமிழகம்
முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி ராணுவத்தை வீழ்த்தியது தமிழகம்
முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி ராணுவத்தை வீழ்த்தியது தமிழகம்
ADDED : ஜூலை 12, 2025 12:15 AM

சென்னை, முருகப்பா தங்க கோப்பைக்கான ஹாக்கி போட்டியில், நேற்றைய லீக் ஆட்டத்தில், தமிழக அணி, 5 - 1 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவத்தை வீழ்த்தி, பலத்தை நிரூபித்தது.
எம்.சி.சி., முருகப்பா குரூப் சார்பில், அகில இந்திய அளவிலான, 96வது முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டிகள், எழும்பூரில் நடந்து வருகின்றன. தமிழகம், மஹாராஷ்டிரா, இந்திய ரயில்வே, கர்நாடகா உள்ளிட்ட 10 அணிகள் இரு பிரிவாக மோதி வருகின்றன.
நேற்று முன்தினம் மாலை நடந்த 'ஏ' பிரிவின் முதல் ஆட்டத்தில், தமிழகம் மற்றும் மஹாராஷ்டிரா அணிகள் எதிர்கொண்டன. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில், மஹாராஷ்டிரா வீரர் ரோஹன், உரிய முறையில் பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.
ஆட்டம், 1 - 0 என்ற முன்னிலை, 42வது நிமிடம் வரை தெடர்ந்த நிலையில், தமிழக வீரர் சோமன்னா, பெனால்டி கார்னரில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலையாக்கினார். போட்டியின் முடிவில், 1 - 1 என்ற கணக்கில் ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.
அடுத்து, 'பி' பிரிவு ஆட்டத்தில், கர்நாடகா அணி, 2 - 1 என்ற கோல் கணக்கில், மத்திய நேரடி வரிகள் வாரிய அணியை தோற்கடித்தது.
நேற்று மதியம் நடந்த 'ஏ' பிரிவு ஆட்டத்தில், இந்திய ராணுவம் மற்றும் தமிழக அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே தமிழக அணி ஆதிக்கம் செலுத்தியது. முடிவில், 5 - 1 என்ற கோல் கணக்கில், இந்திய ராணுவ அணியை தோற்கடித்து, தமிழக அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.