/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தமிழக மின்வாரிய மகளிர் அணி கேரம் போட்டியில் முதலிடம்
/
தமிழக மின்வாரிய மகளிர் அணி கேரம் போட்டியில் முதலிடம்
தமிழக மின்வாரிய மகளிர் அணி கேரம் போட்டியில் முதலிடம்
தமிழக மின்வாரிய மகளிர் அணி கேரம் போட்டியில் முதலிடம்
ADDED : டிச 05, 2025 06:34 AM
சென்னை: மின் வாரியங்களுக்கு இடையிலான கேரம் போட்டியில், தமிழக மகளிர் அணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம் சார்பில், நாடு முழுதும் உள்ள மின் வாரியங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, 47வது அகில இந்திய மின் வாரிய மகளிர் விளையாட்டு போட்டி, சென்னை பெரிய மேடில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
தமிழகம், அசாம், கேரளா உட்பட ஒன்பது மாநிலங்களில் இருந்து, 250 வீராங்கனையர் குழுவாகவும், தனிநபராகவும் பங்கேற்றுள்ளனர்.
இதில், கேரம், செஸ், பேட்மின்டன் உட்பட ஐந்து வகையான விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
இரண்டாவது நாள் போட்டிகள், நேற்று நடைபெற்றன. அதில் கேரம், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளின் குழு பிரிவு சுற்றுகள் நிறைவடைந்து உள்ளன.
இதில், கேரம் குழு பிரிவில் அசத்திய தமிழக அணி முதலிடம் பிடித்தது. தொடர்ந்து, ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தன.
அடுத்து நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில், ஆந்திரா மாநில அணி முதலிடமும், சத்தீஸ்கர் மற்றும் தமிழக அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

