/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாமில் போக்குவரத்து மத்திய அரசிடம் ரூ.2,388 கோடி கேட்குது தமிழக அரசு
/
பகிங்ஹாமில் போக்குவரத்து மத்திய அரசிடம் ரூ.2,388 கோடி கேட்குது தமிழக அரசு
பகிங்ஹாமில் போக்குவரத்து மத்திய அரசிடம் ரூ.2,388 கோடி கேட்குது தமிழக அரசு
பகிங்ஹாமில் போக்குவரத்து மத்திய அரசிடம் ரூ.2,388 கோடி கேட்குது தமிழக அரசு
ADDED : டிச 27, 2025 05:04 AM

சென்னை: உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை துவக்க வசதியாக, பகிங்ஹாம் கால்வாயை மேம்படுத்தும் திட்டத்திற்கு, 2,388 கோடி ரூபாயை வழங்குமாறு, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திரா வழியாக தமிழகத்தில் நுழைந்து புதுச்சேரி வரை பயணிக்கும் பகிங்ஹாம் கால்வாயில், ஆங்கிலேயர் ஆட்சியில், சரக்கு படகு போக்கு வரத்து நடந்து வந்தது. பின், படிப்படியாக போக்கு வரத்து நிறுத்தப்பட்டு, கால்வாய் சீரழிந்தது.
தமிழகத்தில், தற்போது கழிவுநீரை வெளியேற்றும் கட்டமைப்பாக பகிங்ஹாம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில், உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை துவக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, மத்திய உள்நாட்டு நீர்வழி ஆணைய தலைவர் சுனில் பாலிவால், தமிழக நீர்வளத் துறையினருடன் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன், முதன்மை தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பகிங்ஹாம் கால்வாயில் மீண்டும் நீர்வழி போக்கு வரத்தை துவக்க, மத்திய அரசு மட்டுமின்றி, தமிழக அரசும் ஆர்வமாக உள்ளது. இதற்காக, பகிங்ஹாம் கால்வாயை முழுமையாக துார்வார வேண்டும். பல இடங்களில் சேதமடைந்துள்ள மதகுகள், ஷட்டர் உள்ளிட்டவற்றை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்.
எனவே, பகிங்ஹாம் கால்வாய் புனரமைப்பு பணிகளுக்கு, 2,388 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, மத்திய அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு நிதி வழங்கும்பட்சத்தில், அடுத்தாண்டு பணிகள் துவங்கும். எண்ணுாரில் துவங்கி கோவளம் வரை, 168 கி.மீ.,க்கு பகிங்ஹாம் கால்வாய் சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

