/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமான நிலைய குளறுபடிக்கு தீர்வு கோரி மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம்
/
விமான நிலைய குளறுபடிக்கு தீர்வு கோரி மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம்
விமான நிலைய குளறுபடிக்கு தீர்வு கோரி மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம்
விமான நிலைய குளறுபடிக்கு தீர்வு கோரி மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம்
ADDED : செப் 07, 2025 01:57 AM
சென்னை 'சென்னை விமான நிலைய குளறுபடிகளுக்கு தீர்வு காணக்கோரி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடுவுக்கு, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:
மதுரை செல்லும் ஏ.டி.ஆர்., வகை விமானங்கள், சென்னை விமான நிலையத்தின் கடை கோடியில் நிறுத்தப்படுகின்றன. அங்கு செல்ல பயணியர், விமான நிலையத்திற்குள், பல கி.மீ., பேருந்தில் பயணிக்க வேண்டியுள்ளது.
விமானத்தில் ஆகாய வழியே மதுரைக்கு பயணமாகும் நேரம், பேருந்தில் பயணிக்க ஆகிறதே என்ற சலிப்பு, ஒவ்வொரு பயணிக்கும் ஏற்படுகிறது.
இப்பேருந்துகளில் இருக்கைகள் குறைவாகவே உள்ளதால், வயது மூத்தோரும், குழந்தைகளும்கூட நின்று கொண்டே பயணிக்க வேண்டியுள்ளது.
சென்னை விமான நிலையத்தின், 1,301 ஏக்கர் நிலப்பரப்பின் சுற்றுச்சுவர் ஒட்டியுள்ள ஒட்டு மொத்த பாதையும் கடந்து, பார்க்கிங் கட்டணம் குறைவு என்ற காரணத்தால், கடைக்கோடியில் இவ்விமானங்கள் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை; கட்டணமும் கட்டுக்குள் இல்லை.
சென்னையில் இருந்து மதுரை, துாத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களுக்கு செல்ல, குறைந்த நபர்களே பயணிக்கும் வகையிலான, ஏ.டி.ஆர்., வகை விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதிகம் மக்கள் பயணிக்கும் வழித்தடங்களில், 'ஏர் பஸ்' வகை விமானங்களை இயக்குவதே சரியாக இருக்கும்.
எனவே, இப்பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.