/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்

ADDED : ஆக 09, 2025 12:32 AM
சென்னை, தேசிய யூத் குத்துச்சண்டை போட்டியில், தமிழக வீரர்கள், பதக்கங்களை குவித்து அசத்தினர்.
இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில், 'பீஹார் கோப்பை - 2025' என்ற பெயரில், தேசிய யூத் குத்தச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, பீஹார் மாநிலம், பகல்பூரில்........... நடந்தது.
போட்டியில், நாடு முழுதும் இருந்து, வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் சார்பில், 11வீரர்கள் பங்கேற்றனர்.
அதில், பல்வேறு பிரிவுகளில் டி.சரண், ரூபன் ஆலன், யுகேஷ், பிரதீப் கமல், அபிஷேக், வி.சரண் ஆகிய ஆறு பேர் வெள்ளியும், நவீன்குமார், கார்த்திக், சபரீஷ்வர் ஆகியோர் வெண்கல பதக்கமும் கைப்பற்றினர்.
சென்னை திரும்பிய வீரர்களுக்கு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மாநில குத்துச்சண்டை கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.