/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி: தமிழக வீரர்கள் முன்னிலை
/
சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி: தமிழக வீரர்கள் முன்னிலை
சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி: தமிழக வீரர்கள் முன்னிலை
சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி: தமிழக வீரர்கள் முன்னிலை
ADDED : செப் 30, 2025 12:23 AM

சென்னை:சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டியில், தமிழக வீரர்கள் ஐந்து பேர் முன்னிலையில் உள்ளனர்.
நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் கல்லுாரி மற்றும் மவுண்ட் செஸ் அகாடமி இணைந்து, எம்.எஸ்., வெங்கடராமன் நினைவு கோப்பைக்கான, சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டியை, செம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடத்தி வருகிறது.
போட்டியில், சர்வதேச மாஸ்டர்கள், மூன்று பிடே மாஸ்டர்கள் உட்பட 442 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். மொத்தம் எட்டு சுற்றுகள் விதம் போட்டிகள் நடக்கின்றன.
இதில், நேற்று மதியம் வரை ஐந்து சுற்றுகள் நிறைவடைந்தன. முடிவில், தமிழக வீரர்களான கோயம்புத்துாரைச் சேர்ந்த அவினாஷ் ரமேஷ், ஐ.சி.எப்., வீரர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் பிரவீன்குமார், சென்னையைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோர், தலா ஐந்து புள்ளிகளில் முன்னிலையில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து, 4.5 புள்ளிகளில், 15 வீரர்கள் உள்ளனர்.
போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன. போட்டியில் வெற்றி பெறும், 62 வீரர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு தொகையும், வயது வாரியாக கோப்பையும் வழங்கப்பட உள்ளன.