/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலக கோப்பை 'கிக் பாக்சிங்' களமிறங்கும் தமிழக வீரர்கள்
/
உலக கோப்பை 'கிக் பாக்சிங்' களமிறங்கும் தமிழக வீரர்கள்
உலக கோப்பை 'கிக் பாக்சிங்' களமிறங்கும் தமிழக வீரர்கள்
உலக கோப்பை 'கிக் பாக்சிங்' களமிறங்கும் தமிழக வீரர்கள்
ADDED : அக் 06, 2025 02:55 AM

சென்னை: உஸ்பெகிஸ்தான் கிக் பாக்சிங் சங்கம் மற்றும் வாக்கோ உலக கிக் பாக்சிங் கூட்டமைப்பு சார்பில், உலக கோப்பைக்கான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள தாஷ்கண்ட் நகரில் நாளை துவங்குகிறது.
சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் தமிழக வீரர்கள் மூவர் களமிறங்குகின்றனர்.
இது குறித்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்க பொதுச்செயலருமான சுரேஷ் பாபு கூறுகையில், ''உலக கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்கும் இந்தியா அணிக்காக 18 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
அதில் தமிழகத்தில் இருந்து, சென்னையைச் சேர்ந்த ராகுல், 15, செங்கல்பட்டு அஸ்வின், 12, கிருஷ்ணகிரி ரக்ஷத்ரா, 9 ஆகியோர் பங்கேற்கின்றனர். நடுவராக தமிழகத்தின் சமர்த் லட்சுமிகாந்த் உள்ளார். நிச்சயம் பதக்கங்களுடன் நாடு திரும்புவோம்'' என்றார்.
வீரர்கள், நேற்று முன்தினம், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அரசு நிதியுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அப்போது அவர் உறுதியளித்துள்ளார்.