/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சப் - ஜூனியர் நெட்பால் போட்டி இரு பாலரிலும் தமிழக அணி அசத்தல்
/
தேசிய சப் - ஜூனியர் நெட்பால் போட்டி இரு பாலரிலும் தமிழக அணி அசத்தல்
தேசிய சப் - ஜூனியர் நெட்பால் போட்டி இரு பாலரிலும் தமிழக அணி அசத்தல்
தேசிய சப் - ஜூனியர் நெட்பால் போட்டி இரு பாலரிலும் தமிழக அணி அசத்தல்
ADDED : டிச 30, 2024 01:22 AM

சென்னை: தேசிய அளவிலான 30வது சப் - ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை, ஆர்.எம்.கே., ரெசிடென்ஷியல் பள்ளி சார்பில் பள்ளி மைதானத்தில் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அமெச்சூர் நெட்பால் சங்கம் மற்றும் இந்திய நெட்பால் சம்மேளனம் இணைந்து நடத்தும் இப்போட்டிகள், நேற்று முன்தினம் துவங்கின.
நாடு முழுதும் 28 மாநிலங்களைச் சேர்ந்த 54 அணிகள் சார்பில், 800 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.
போட்டியை, ஆர்.எம்.கே., கல்விக் குழும தலைவர் முனிரத்தினம், இந்திய நெட்பால் சம்மேளன தலைவர் சுமன் கவுசிக் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 'லீக்' போட்டியில், பஞ்சாப் மாநில அணியை எதிர்த்து களமிறங்கிய தமிழக அணி, 24- - 13 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதே பிரிவில், கர்நாடகா, ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் பீஹார் மாநில அணிகளும், முதல் சுற்று 'லீக்' போட்டியில் வெற்றி பெற்றன.
பெண்கள் முதல் சுற்று 'லீக்' போட்டியில், கோவா அணியை 25 - -4 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வீழ்த்தியது.
இதே பிரிவில், ஹரியானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கர்நாடகா மாநில அணிகள் வெற்றி பெற்றன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.