/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சாபா' கூடைப்பந்து போட்டி தமிழக அணி அசத்தல்
/
'சாபா' கூடைப்பந்து போட்டி தமிழக அணி அசத்தல்
ADDED : ஏப் 06, 2025 12:17 AM

சென்னை, 'சாபா' எனும் தெற்காசிய கூடைப்பந்து சங்கம் சார்பில், சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இதில், இந்தியா சார்பில் தமிழ்நாடு, இலங்கையின் கொழும்பு, நேபாளத்தின் டைம்ஸ் கிளப், புடானின் திம்பு மேஜிஸ், மாலத்தீவின் டிரேக்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில், தமிழகம் மற்றும் கொழும்பு அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 110 - 54 என்ற கணக்கில், தமிழக அணி வெற்றி பெற்றது.
தமிழக வீரர்கள் முயின் பெக் - 11 புள்ளிகள், அரவிந்த் முத்துகிருஷ்ணன் - 16, பிரணவ் - 10, ஆனந்த்ராஜ் - 20, லோகேஷ்வரன் - 11 புள்ளிகள் பெற்றுக்கொடுத்தனர்.
மற்றொரு போட்டியில், டைம்ஸ் கிளப் 67 - 59 என்ற கணக்கில் டிரேக்ஸ் அணியை தோற்கடித்தது.
நேற்று ஓய்வு என்பதால், போட்டிகள் நடைபெறவில்லை. நாளை மற்றும் நாளை மறுநாள் போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.