/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய மகளிர் கிரிக்கெட் தொடர் தமிழக அணி காலிறுதிக்கு தகுதி
/
தேசிய மகளிர் கிரிக்கெட் தொடர் தமிழக அணி காலிறுதிக்கு தகுதி
தேசிய மகளிர் கிரிக்கெட் தொடர் தமிழக அணி காலிறுதிக்கு தகுதி
தேசிய மகளிர் கிரிக்கெட் தொடர் தமிழக அணி காலிறுதிக்கு தகுதி
ADDED : டிச 04, 2025 01:52 AM

சென்னை: அகமதாபாத்தில் நடந்து வரும் தேசிய மகளிர் கிரிக்கெட் போட்டியில், தமிழக மகளிர் அணி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், 23 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தேசிய கிரிக்கெட் 'எலைட்' டி - 20 தொடர், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் நடக்கிறது. இதில், நாட்டின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த, 30 அணிகள் போட்டியிடுகின்றன.
போட்டி, லீக் கம் நாக் -அவுட் முறையில் நடைபெறுகிறது. இதன் 'சி' பிரிவில், கர்நாடகா, உத்தர பிரதேசம், திரிபுரா, அசாம் மற்றும் சண்டிகர் அணிகளோடு, தமிழக அணி இடம் பெற்றுள்ளது.
லீக் போட்டி முடிவில், தமிழக அணி விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 20 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து, காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
'சி' பிரிவின் இரண்டாவது இடத்தில், தலா 12 புள்ளிகளுடன் கர்நாடகா அணியும், உத்தர பிரதேசம் அணியும் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடரில், அதிக ரன்கள் அடித்த வீராங்கனையர் பட்டியலில், இரண்டாவது இடத்தில் தமிழகத்தின் கமலினியும், அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனையர் பட்டியலில், முதல் இடத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும் இடம்பெற்றுள்ளனர்.

