/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கேலோ இந்திய' மகளிர் கூடைப்பந்து அரையிறுதியில் எஸ்.ஆர்.எம்., அணி
/
'கேலோ இந்திய' மகளிர் கூடைப்பந்து அரையிறுதியில் எஸ்.ஆர்.எம்., அணி
'கேலோ இந்திய' மகளிர் கூடைப்பந்து அரையிறுதியில் எஸ்.ஆர்.எம்., அணி
'கேலோ இந்திய' மகளிர் கூடைப்பந்து அரையிறுதியில் எஸ்.ஆர்.எம்., அணி
ADDED : டிச 04, 2025 01:51 AM
சென்னை: 'கேலோ இந்தியா' கூடைப்பந்து போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய பல்கலை கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 'கேலோ இந்திய' பல்கலை கூடைப்பந்து போட்டி, ராஜஸ்தான் நடக்கிறது.
இதில், 16 பல்கலை அணிகள் நான்கு பிரிவாக பங்கேற்றுள்ளன. போட்டிகள் 'லீக் கம் நாக்-அவுட்' முறையில் நடைபெறுகிறது. அந்த வகையில் மகளிர் 'ஏ' பிரிவில் இடம் பிடித்த சென்னை எஸ்.ஆர்.எம்., அணி தன் சிறப்பான ஆட்டத்தால் லீக் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று, தன் பிரிவின் முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதி போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, பஞ்சாப் பல்கலை அணியை இன்று எதிர்கொள்கிறது.