/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சாபா' கூடைப்பந்து போட்டி தமிழக அணிக்கு தங்கம்
/
'சாபா' கூடைப்பந்து போட்டி தமிழக அணிக்கு தங்கம்
ADDED : ஏப் 08, 2025 11:48 PM

சென்னை, 'சாபா' எனும் தெற்காசிய கூடைப்பந்து சங்கம் சார்பில், சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 2ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.
போட்டியில், இந்தியா சார்பில் தமிழக அணி, இலங்கையின் கொழும்பு, நேபாளத்தின் டைம்ஸ் கிளப், புடானின் திம்பு மேஜிக், மாலத்தீவின் டிரேக்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன.
நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் சுற்றில், டைம்ஸ் கிளப் அணி, 87 - 59 என்ற கணக்கில், திம்பு மேஜிக் அணியை தோற்கடித்தது.
இறுதியாக நடந்த லீக்கில், தமிழகம் மற்றும் மாலத்தீவின் டிரேக்ஸ் அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், 106 - 49 என்ற கணக்கில், தமிழக அணி வெற்றி பெற்றது.
அனைத்து புள்ளிகள் அடிப்படையில், தங்கம் வென்ற தமிழக அணி, மே மாதம் நடக்க உள்ள 'பிபா விசெல் பைனல் - 8' இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
தொடர்ந்து, இலங்கை, நேபாளம் அணிகள் முறையே, வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சாபா தலைவர் அகமது ஆதாம், இந்திய கூடைப்பந்து சங்க தலைவர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பதக்கங்களை வழங்கினர்.