/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
64வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் 58 வீரர்களை களமிறக்குது தமிழகம்
/
64வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் 58 வீரர்களை களமிறக்குது தமிழகம்
64வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் 58 வீரர்களை களமிறக்குது தமிழகம்
64வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் 58 வீரர்களை களமிறக்குது தமிழகம்
ADDED : செப் 16, 2025 01:18 AM
சென்னை;நடப்பாண்டிற்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஜார்க்கண்டில் நடைபெறுகிறது. இதில், தமிழகம் சார்பில், 58 வீரர்கள் களமிறங்குகின்றனர்.
இதுகுறித்து, தமிழ் நாடு தடகள சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடப்பு ஆண்டிற்கான, 64வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், ஜார்க்கண்ட் மாநிலத்தில், வரும் 27ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கின்றன.
இப்போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச தடகள போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.
இதனால், ஒவ்வொரு மாநிலமும் திறமையான போட்டியாளர்களை களமிறக்குகின்றன.
அதன்படி, திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவிக்க, தமிழகம் சார்பில் 28 வீரர்களும், 30 வீராங்கனையரும் இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இவர்களில், தன லட்சுமி 100, 200 மீ., ஓட்டப் பந்தயத்தில் உறுதியாக பதக்கம் வெல்வார்.
தவிர, 100 மீ., ஓட்டத்தில் தனலட்சுமிக்கு சவால் விடும் வகையில் அபிநயா இருப்பார். மேலும், 20 கி.மீ., நடை பந்தயத்தில் மோகவி பதக்கம் வெல்வார்.
அதுபோல், வட்டு எறிதலில் ராகவன், 110 மீ., தடை ஓட்டத்தில் தனுஷ் ஆதித்யன், 200 மீ., ஓட்டத்தில் ராகுல் ஆகியோர் பதக்கம் வெல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.