/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணியில் இருந்த பெண் போலீசை தாக்கிய 'டாஸ்மாக்' ஊழியர் கைது
/
பணியில் இருந்த பெண் போலீசை தாக்கிய 'டாஸ்மாக்' ஊழியர் கைது
பணியில் இருந்த பெண் போலீசை தாக்கிய 'டாஸ்மாக்' ஊழியர் கைது
பணியில் இருந்த பெண் போலீசை தாக்கிய 'டாஸ்மாக்' ஊழியர் கைது
ADDED : நவ 13, 2024 10:31 PM
கோடம்பாக்கம்:வேளச்சேரியைச் சேர்ந்தவர் சகுந்தலா, 34; கோடம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார்.
நேற்று மாலை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, லிபர்ட்டி அருகே, போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அங்கு, மது போதையில் வந்த நபர், சாலையோரம் பூ கடை வைத்திருந்த பெண், அவரது மகளிடம் ஆபாசமாக பேசினார்.
இதை, பெண் போலீஸ் சகுந்தலா தட்டிக்கேட்டார். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த போதை ஆசாமி, போலீசின் முகத்தில் கையால் குத்தினார்.
அங்கிருந்த பொதுமக்கள், அந்த போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து, கோடம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் காயமடைந்த சகுந்தலா, கே.கே., நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
கோடம்பாக்கம், மூப்பன் மேஸ்திரி தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ், 48, என்பதும், கொட்டிவாக்கத்தில் உள்ள 'எலைட் டாஸ்மாக்' கடை ஊழியராக பணிபுரிவதும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மோகன்ராஜை கைது செய்தனர்.