/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோர பள்ளத்தில் சிக்கிய டாரஸ் லாரி
/
சாலையோர பள்ளத்தில் சிக்கிய டாரஸ் லாரி
ADDED : ஜூலை 09, 2025 12:49 AM

அம்பத்துார், ஆந்திர மாநிலத்தில் இருந்து அம்பத்துாருக்கு, டைல்ஸ் ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் டாரஸ் லாரி ஒன்று வந்தது. வானகரம் சாலையில் செல்ல, அம்பத்துாரில் உள்ள ஆவடி இணை கமிஷனர் அலுவலகத்தில், 'யு - டர்ன்' எடுக்க சாலையோரமாக சென்று திரும்பியது.
அப்போது, லாரியின் பின்பக்க சக்கரங்கள், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் சிக்கி, லாரி லேசாக சாய்ந்தது. இதனால், சி.டி.எச்., சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், லாரி அப்புறப்படுத்தப்பட்டது.
இது குறித்து கனரக வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'அம்பத்துார் போக்குவரத்து போலீசார், சி.டி.எச்., சாலையில் டன்லப் சிக்னல் அருகே தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால், கனரக வாகனங்கள் 'யு -- டர்ன்' செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, டன்லப் சிக்னல் அருகே உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்' என்றனர்.

