/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா விற்ற டீக்கடை தொழிலாளி கைது
/
கஞ்சா விற்ற டீக்கடை தொழிலாளி கைது
ADDED : நவ 24, 2024 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி:வேளச்சேரி ரயில் நிலையம் அருகே, பையுடன் நின்ற, 16 வயது சிறுவனிடம், ரோந்து போலீசார் விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
வேளச்சேரி போலீசார் விசாரணையில், பீஹாரைச் சேர்ந்த புல்பாபு, 21, என்பவரிடம் கஞ்சா வாங்கி வியாபாரம் செய்வது தெரிந்தது.
வேளச்சேரி, சி.ஐ.டி., நகரில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்யும் புல்பாபு, பீஹாரில் இருந்து நண்பர்கள் வாயிலாக கஞ்சா கடத்தி வந்து, இங்குள்ள சில்லரை வியாபாரிகளிடம் விற்பனை செய்வது தெரிந்தது.
போலீசார், இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.