/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் பங்கேற்க அணிகளுக்கு அழைப்பு
/
மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் பங்கேற்க அணிகளுக்கு அழைப்பு
மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் பங்கேற்க அணிகளுக்கு அழைப்பு
மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் பங்கேற்க அணிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 31, 2025 03:15 AM
சென்னை:சென்னையில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, தகுதியான அணிகளுக்கு மாவட்ட வாலிபால் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடப்பாண்டு, சென்னை மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில், வரும் செப்., 11 முதல் 14ம் தேதி வரை நடக்க உள்ளன.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தில் உறுப்பினராக இணைந்துள்ள அணிகள், இப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், chennaidis trictvolleyballassn@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக, செப்., 5ம் தேதிக்குள் தங்கள் அணி பெயரை பதிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அணியிலும், அதிகபட்சம் பள்ளி வீரர்கள் மூன்று பேர் விளையாட அனுமதிக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு, 94448 42628 மற்றும் 98418 16778 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.