ADDED : பிப் 16, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்,
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்துரு, 24; குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில் தங்கி, திருமுடிவாக்கத்தில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
சந்துரு, பெண் ஒருவரை காதலித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, காதலர் தினத்தன்று, காதலியிடம் மொபைல் போனில் பேசியபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சந்துரு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.