நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர்,சேலையூரை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருள்மொழி. இவரது மகள் அமிர்த வர்ஷினி, 25, அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர், நான்கு மாதங்களாக ஒருவரை காதலித்து வந்ததாகவும், வீட்டிற்கு இதுதெரிந்து, வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை, அமிர்த வர்ஷினியின் அறை கதவை திறந்து பார்த்த போது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேறு ஒரு நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.