/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இன்ஸ்டா'வில் இ- சிகரெட் விற்ற வாலிபர் சிக்கினார்
/
'இன்ஸ்டா'வில் இ- சிகரெட் விற்ற வாலிபர் சிக்கினார்
ADDED : ஏப் 22, 2025 12:40 AM
அயனாவரம், அரசால் தடை செய்யப்பட்ட 'இ - சிகரெட்' விற்கப்படுவதாக, அயனாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அயனாவரம் பேருந்து நிறுத்தம் அருகே, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை, போலீசார் பிடித்து சோதனை செய்ததில், அவரிடம், ஐந்து 'இ - சிகரெட்' இருந்தது.
விசாரணையில், அயனாவரம், யூ.ஐ., நகரைச் சேர்ந்த பிரணவ்குமார், 19, என்பதும், சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராம், ஆன்லைன்' வாயிலாக, இ - சிகரெட் விற்பனை செய்பவதும் தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 7,500 ரூபாய் மதிப்புள்ள இ சிகரெட்களை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
ஒரு முறை சார்ஜ் செய்தால், பலமுறை பயன்படுத்தப்படும் என்பதால் பர்மா பஜாரில் குறைந்த விலைக்கு அவற்றை வாங்கியுள்ளார்.
இ - சிகரெட் சம்பந்தமாக ஆன்லைனில் விளம்பரம் செய்து, 'ஜி பே' செயலி வாயிலாக பணத்தைப் பெற்று, அவர்களின் இடத்திற்கே சென்று விற்பனை செய்துள்ளது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.