ADDED : டிச 19, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுனில், 28, ராஜிவ்குமார், 28. இருவரும் அம்பத்துார் தொழிற்பேட்டை தொழிற்சாலைஊழியர்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தொழிற்சாலை அருகே அமர்ந்து மது அருந்தியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ராஜிவ்குமார், அங்கிருந்த மரக்கட்டை எடுத்து, சுனிலின் பின்பக்க தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த சுனிலை,அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரித்த, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் ராஜிவ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.