ADDED : நவ 10, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், பெருங்களத்துார்- வண்டலுார் இடையே, தண்டவாளத்தில் ஆண் உடல் கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
இறந்த நபர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரை சேர்ந்த மணிகண்டன், 19, என்பதும், பேருந்து மூலம் திருக்கோவிலுாரில் இருந்து வண்டலுார் வந்த அவர், தான் தங்கியிருந்த அறைக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, தேஜாஸ் விரைவு ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.
தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.