/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை
/
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஆக 22, 2025 12:19 AM

ஆவடி, எண்ணுார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை, கடந்த 2019ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு, 22, என்ற வாலிபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, டில்லி பாபுவை எண்ணுார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து, வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், டில்லிபாபுவுக்கு, ஒன்பது ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக ஒராண்டு சிறை தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

