/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டு உரிமையாளரின் மகன் தாக்கியதில் வாலிபர் 'சீரியஸ்'
/
வீட்டு உரிமையாளரின் மகன் தாக்கியதில் வாலிபர் 'சீரியஸ்'
வீட்டு உரிமையாளரின் மகன் தாக்கியதில் வாலிபர் 'சீரியஸ்'
வீட்டு உரிமையாளரின் மகன் தாக்கியதில் வாலிபர் 'சீரியஸ்'
ADDED : ஜூன் 30, 2025 03:16 AM
எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ்குமார், 26. இவர், உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இவர், சர்மா நகரில் தங்கி, இக்பால் என்பவரிடம் கார்ப்பென்டர் வேலை செய்து வருகிறார். நேற்று வேலை முடித்து வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் உரிமையாளரின் மகன் ஜெபஸ்டின் சாம்சன், மதுபோதையில் ஆகாஷ்குமாரிடம் வீண் தகராறு செய்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்து சுயநினைவின்றி விழுந்த ஆகாஷ்குமாரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
எதனால் பிரச்னை ஏற்பட்டது என்ற காரணம் தெரியவில்லை. ஆபத்தான நிலையில் ஆகாஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்து, ஜெபஸ்டின் சாம்சனை கைது செய்து விசாரிக்கின்றனர்.