/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் பதாகை ஏரி துார் வாரும் பணி துவக்கம்
/
கோவில் பதாகை ஏரி துார் வாரும் பணி துவக்கம்
ADDED : ஜன 09, 2025 02:51 AM

ஆவடி:ஆவடி, ஏரி 570 ஏக்கர் பரப்பு உடையது. ஒவ்வொரு மழையின்போது, கோவில் பதாகை ஏரி நிரம்பி வழிகிறது. கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், கணபதி அவென்யூ வழியாக கோவில் பதாகை பிரதான சாலையில், பெருக்கெடுத்து ஓடுகிறது.
சமீபத்தில் கொட்டி தீர்த்த பருவ மழையின்போது, கலங்கலில் இருந்து வெளியேறிய தண்ணீர், மங்களம் நகர் தரைப்பாலம் வழியாக குடியிருப்புக்குள் புகுந்தது.
இதனால், மங்களம் நகர், டிரினிட்டி அவென்யூ, எம்.சி.பி., நகர், கிருஷ்ணா அவென்யூ, கிறிஸ்து காலனி, செக்ரட்டரி காலனியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதற்கு தீர்வு காண, 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 அடிக்கு ஏரியை ஆழப்படுத்தி, தடுப்பணை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் நாசர் அதற்கான பணிகளை துவங்கி வைத்து நேற்று அடிக்கல் நாட்டினார். பின், பருத்திப்பட்டில் இருந்து கூவத்திற்கு செல்லும் கால்வாய் மீதுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

