/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் நிறுத்துவதில் தகராறு கோவில் ஊழியர் மீது தாக்குதல்
/
பைக் நிறுத்துவதில் தகராறு கோவில் ஊழியர் மீது தாக்குதல்
பைக் நிறுத்துவதில் தகராறு கோவில் ஊழியர் மீது தாக்குதல்
பைக் நிறுத்துவதில் தகராறு கோவில் ஊழியர் மீது தாக்குதல்
ADDED : மே 08, 2025 12:27 AM
வண்ணாரப்பேட்டை,
பழைய வண்ணாரப்பேட்டை, டி.எச்., சாலையில் பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு ஞானகோபால் என்பவர் பணிபுரிகிறார்.
இவர் தன் பைக்கை கோவில் அலுவலகம் அருகே, நேற்று நிறுத்தி இருந்தார். அங்கு அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர், அவரது பைக்கை நிறுத்த, கோவில் பணியாளர் ஞானகோபால் தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மர்ம நபர் இவரது வாகனத்தை கீழே தள்ளி விட்டார். அதை எடுக்க முயன்ற ஞானகோபால் மற்றும் மற்றொரு கோவில் ஊழியரான கணேஷ் குமார் ஆகியோர் மீதும், மர்ம நபர் தாக்குதல் நடத்தினார். இதில் காயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோவில் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டித்ததோடு, கோவில் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.