ADDED : பிப் 21, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை கொட்டிவாக்கத்தில் காலியாக உள்ள தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடம், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள், சென்னையை சேர்ந்தவர்களாகவும், மேற்படி மீனவ கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள், வரும் 29ம் தேதிக்குள், நீலாங்கரையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, adfmnkpm@gmail.com என்ற இ - மெயில் முகவரியிலும், 98401 56196 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

